search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லுங்கி நிகிடி"

    தென்ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர்களான லுங்கி நிகிடி, அன்ரிச் நோட்ஜ் ஆகியோர் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளனர். #IPL2019
    ஐபிஎல் 12-வது சீசன் நாளைமறுநாள் (23-ந்தேதி) தொடங்குகிறது. சென்னையில் நடக்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு இன்னும் ஒரு நாட்கள் மட்டுமே உள்ளதால் 8 அணிகளும் ஆடும் லெவன் அணியைத் தேர்வு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றன.

    கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தென்ஆப்பிரிக்காவின் இளம் வேகப்பந்து வீச்சாளரான லுங்கி நிகிடி இடம்பிடித்திருந்தார். முக்கியமான போட்டிகளில் தனது சிறப்பான பந்து வீச்சால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார்.

    தற்போது இலங்கை அணிக்கெதிராக ஐந்து போட்டிகளில் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடினார். ஐந்தாவது போட்டியின்போது இவரது இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். இவர் விலகியதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வேகப்பந்து வீச்சை இழந்துள்ளது.

    மற்றொரு வீரரான அன்ரிச் நோட்ஜ்-யை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2019 சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அடிப்படை விலையான 20 லட்சத்திற்கு வாங்கியது. இவர் இலங்கை தொடரில் அறிமுகமானார். இலங்கை தொடரில் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஆதிக்கம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தோள்பட்டை காயத்தால் 6 வாரங்கள் அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்று தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

    இதனால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். ஏற்கனவே, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஷிவம் மவி, கம்லேஷ் நகர்கோடி ஆகியோர் காயத்தால் விலகியுள்ளனர். இந்நிலையில் அன்ரிச் விலகியிருப்பது கொல்கத்தா அணிக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
    இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் லுங்கி நிகிடி சேர்க்கப்பட்டுள்ளார். அம்லாவிற்கு இடமில்லை. #SAvSL
    தென்ஆப்பிரிக்கா - இலங்கை இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கை 2-0 எனக் கைப்பற்றியது. இந்நிலையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் மார்ச் 3-ந்தேதி ஜோகன்னஸ்பர்க்கில் தொடங்குகிறது.

    இந்தத் தொடருக்கான தென்ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் போட்டியில் மோசமாக விளையாடிய அம்லாவிற்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. காயத்தில் இருந்து குணம் அடைந்துள்ள லுங்கி நிகிடி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.



    தென்ஆப்பிரிக்கா அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. டு பிளிசிஸ் 2. டி காக் 3. ரீசா ஹென்ரிக்ஸ் 4. இம்ரான் தாஹிர் 5. டேவிட் மில்லர் 6. வியான் முல்டர் 7. லுங்கி நிகிடி 8. அன்ரிச் நோர்ட்ஜே 9. பெலுக்வாயோ 10. பிரிட்டோரியஸ் 11. ரபாடா 12. ஷம்சி 13. ஸ்டெயின் 14. வான் டெர் டஸ்சன்.
    தென்ஆப்பிரிக்கா அணிக்கு அனுபவம் இல்லாத பந்து வீச்சு யுனிட் மிகப்பெரிய பிரச்சனை என ஸ்டெயின் தெரிவித்துள்ளார். #DaleSteyn
    இங்கிலாந்தில் அடுத்த வருடம் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இந்த தொடரில் தென்ஆப்பிரிக்கா அணிக்கு அனுபவம் இல்லாத பந்து வீச்சு யுனிட்டுதான் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும் என டேல் ஸ்டெயின் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து டேல் ஸ்டெயின் கூறுகையில் ‘‘ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் எங்களது மிகப்பெரிய பிரச்சனையே பந்து வீச்சு யுனிட்டுதான். இது மிகமிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும் என்று தோன்றவில்லை. ஆனால், அனுபவம் மிகப்பெரிய பிரச்சனைதான்.



    எங்களுடைய டாப் சிக்ஸ் பேட்ஸ்மேன்களை எடுத்துக்கொண்டால், அனைத்து வீரர்களும் 800-க்கும் மேற்பட்ட போட்டியில் விளையாடியுள்ளனர். அதேவேளையில், பந்து வீச்சாளர்களை பார்த்தீர்கள் என்றால், கடைசி நான்கு வீரர்கள் 150 போட்டிகளில்தான் விளையாடியுள்ளனர்.

    35 வயதானாலும் இன்னும் நான் கற்றுக் கொண்டுதான் இருக்கிறேன். ஆனால், நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பது எனக்குத் தெரியும். ஒருநாள் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தால், கட்டாயம் விளையாடி அணிக்கு வெற்றி தேடிக்கொடுப்பேன்.



    ரபாடா, லுங்கி நிகிடி, டேன் பேட்டர்சன், வில்லியம் முல்டர் அவர்களுடைய ஆட்டத்தில் இருந்து கற்றுக் கொண்டு வருகிறார்கள். ஆனால் துரதிருஷ்டவசமாக உலகக்கோப்பை தொடருக்கு கற்றுக் கொண்டிருக்கும்போதே செல்ல முடியாது. நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் தெரிந்துக் கொள்வது தேவையானது’’ என்றார்.

    டேல் ஸ்டெயின் தென்ஆப்பிரிக்கா அணிக்காக 116 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 178 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.
    கண்டியில் நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் அறிமுக வீரரின் சதத்தால் 78 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. #SLvSA
    இலங்கை - தென்ஆப்பிரிக்கா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்று 2-0 என முன்னிலைப் பெற்றிருந்தது.

    இந்நிலையில் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கண்டியில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி தென்ஆப்பிரிக்கா அணியின் ஹசிம் அம்லா, டி காக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

    டி காக் 2 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து அறிமுக வீரரான ரீசா ஹென்ரிக்ஸ் களம் இறங்கினார். இவர் ஹசிம் அம்லா உடன் இணைந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அம்லா 59 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.



    ரீசா ஹென்ரிக்ஸ் 89 பந்தில் 102 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தான் அறிமுகமான முதல் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தினார். அதன்பின் வந்த டுமினி 90 பந்தில் 92 ரன்னும், மில்லர் 47 பந்தில் 51 ரன்களும் அடிக்க தென்ஆப்பிரிக்கா 7 விக்கெட் இழப்பிற்கு 363 ரன்கள் குவித்தது.

    பின்னர் 364 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களம் இறங்கியது. அந்த அணியின் வீரர்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க 45.2 ஓவரில் 285 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. தனஞ்ஜெயா டி சில்வா அதிகபட்சமாக 84 ரன்கள் சேர்த்தார்.



    தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் லுங்கி நிகிடி 4 விக்கெட்டும், பெலுக்வாயோ 3 விக்கெட்டும் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் தென்ஆப்பிரிக்கா மூன்றிலும் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. இன்னும் இரண்டு போட்டிகள் மீதமுள்ளன.
    தம்புல்லாவில் நடைபெற்று வரும் 2-வது ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்கா வெற்றிக்கு 245 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இலங்கை. #ENGvIND
    இலங்கை - தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி தம்புல்லாவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி இலங்கை அணியின் உபுல் தரங்கா, நிரோஷன் டிக்வெல்லா தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். தரங்கா 9 ரன்கள் எடுத்த நிலையில் லுங்கி நிகிடி பந்தில் வெளியேறினார். அடுத்து வந்த குசால் மெண்டிஸ் ரன்ஏதும் எடுக்காமலும், குசால் பெரேரா 12 ரன்னிலும் வெளியேறினார்கள்.

    அதன்பின் டிக்வெல்லா உடன் மேத்யூஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. அரைசதம் அடித்த டிக்வெல்லா 69 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.



    அதன்பின் மீண்டும் இலங்கை விக்கெட்டுக்கள் சரிய ஆரம்பித்தது. ஷெஹன் ஜெயசூர்யா 18 ரன்னிலும், திசாரா பேரேரா 19 ரன்னிலும், அகிலா தனஞ்ஜெயா 9 ரன்னிலும், சுரங்கா லக்மல் 7 ரன்னிலும் வெளியேறினார்கள்.



    கேப்டன் மேத்யூஸ் கடைசி வரை நிலைத்து நின்று விளையாடி 79 ரன்கள் சேர்க்க இலங்கை நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 244 ரன்கள் சேர்த்தது. வேகப்பந்து வீச்சாளர்கள் நிகிடி, பெலுக்வாயோ தலா நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

    பின்னர் 245 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கோடு தென்ஆப்பிரிக்கா பேட்டிங் செய்து வருகிறது.
    நான் ஐபிஎல் ஏலத்தில் ஏலம் எடுக்கப்படுவேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை என்று வேகப்பந்து வீச்சாளர் லுங்கி நிகிடி தெரிவித்துள்ளார். #IPL2018 #CSK
    சென்னை சூப்பர் கிங்ஸ் நேற்றைய ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தியது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் வேகப்பந்து வீச்சாளர் லுங்கி நிகிடி. இவர் நான்கு ஓவரில் 10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.

    லுங்கி நிகிடியை 50 லட்சம் ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் ஏலம் எடுத்தது. ஐந்து போட்டியில் விளையாடி 9 விக்கெட்டுக்கள் கைப்பற்றியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் தான், ஏலம் எடுக்கப்படுவேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை என்கிறார்.



    இதுகுறித்து நிகிடி கூறுகையில் ‘‘முதலில் ஐபிஎல் ஏலத்தில் நான் ஏலம் எடுக்கப்படுவேன் என்று நினைத்துக் கூட பார்த்ததில்லை. ஆனால், என்மீது நம்பிக்கை வைத்து சென்னை பயிற்சியாளர் பிளமிங் மற்றும் கேப்டன் டோனி ஏலம் எடுத்தது சிறப்பானது.

    அனுபவம் என் கண்முன்னே கிடைத்துக் கொண்டு இருக்கிறது. இவ்வளவு பெரிய ரசிகர்கள் கூட்டத்திற்கு நடுவே விளையாடியதே கிடையாது. இந்த இடம் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பது காண்பதற்கானது. ஆகவே, எனக்கு சிறந்ததாக இருக்கிறது’’ என்றார்.
    ×